திருத்தணி முருகன் கோவிலில் கொடியேற்றத்துடன் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா இன்று முதல் துவங்கி இந்த மாதம் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக நடந்து வருவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக சித்திரை மாத பிரம்மோற்சவ விழா ரத்து செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் உற்சவர் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மேலும் இந்த மாதம் 12ஆம் தேதி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
