கொலை மிரட்டல் விடுக்கும் பிள்ளைகளிடம் இருந்து உயிருக்கு பயந்து அனாதைகள் போல் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மூதாட்டி வேதனை.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த காரிப்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் வெள்ளைய கவுண்டர்(95) இவரது மனைவி பெருமாயி அம்மாள்(85) தங்களுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இவர்களுக்கு செல்வமணி தங்கமணி என்ற 2 மகள்களும் ஒரு மகனும் இருந்துள்ளனர். இந்த நிலையில் மகன் இறந்து விட்டதால் இரண்டு மகள்கள் மற்றும் மகனுடைய மகன் ராஜகோபால் ஆகியோர் தங்களை ஏமாற்றி 5 ஏக்கர் நிலத்தையும் தானசெட்டில்மெண்ட் கிரையம் செய்து கொண்டார்கள். மேலும் தங்களுக்கு வயதாகி விட்ட காரணத்தினால் வீட்டை விட்டு போ என மிரட்டி அடித்து உதைத்து
துன்புறுத்துகிறார்கள் எனவும் வயது மூப்பு நிலையில் இருக்கும் எங்களை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுப்பதாகவும் சாப்பிட உணவிற்கு கூட வழியில்லாமல் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ள பட்டுள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர் இதுகுறித்து காரிப்பட்டி காவல் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார் எனவே கருணை கூர்ந்து மாவட்ட ஆட்சியர் எங்கள் மகள்கள் மற்றும் பேரன் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தங்களது 5 ஏக்கர் நிலத்தை மீட்டு தர வேண்டும் என கண்ணீர் மல்க வேதனையுடன் தெரிவித்தனர்.