• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

‘முதல்வரின் முகவரி’ உருவாகியது புதிய துறை

Byமதி

Nov 15, 2021

முதலமைச்சரின் குறைதீர்ப்பு துறைகளை ஒருங்கிணைத்து, ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறைக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

திமுக அரசுப் பொறுப்பெற்றதில் இருந்து மக்களின் பல்வேறு குறைகளை தீர்க்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றில், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’, ‘முதலமைச்சரின் உதவி மையம்’, ‘முதலமைச்சரின் தனிப்பிரிவு’ மற்றும் ‘ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை’ என அமைப்புகள் தனித்தனியே உள்ளன. தற்போது இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து, இனி அவை அனைத்தும் ஒரே துறையாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் துறைக்கு, ‘முதல்வரின் முகவரி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் ‘முதல்வரின் முகவரி’ துறைக்கு, சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இத்துறையில் மனுக்களுக்கு தீர்வு காண, ஒற்றை இணையதள முகப்பு பயன்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த துறைக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகள் வழங்கும் ஒருங்கிணைப்புத் துறையாக பொதுத்துறை இருக்கும். இத்துறைக்கு சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்” என அரசு தெரிவித்துள்ளது.