• Fri. Jan 17th, 2025

அரசு மதுபான கடைகளிலும் முதல்வர் படம்

ByKalamegam Viswanathan

Jan 8, 2025

தமிழக அரசு கூட்டுறவு மருந்து கடைகளிலும், நியாய விலை கடைகளிலும் முதல்வர் படம் இடம் பெறுவது போல், அரசு மதுபான கடைகளிலும் முதல்வர் படம் இடம்பெற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் மனு அளித்தனர்.

மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகத்திலும், குறிப்பாக அரசு கூட்டுறவு மருந்து கடைகள், அரசு நடத்துகின்ற நியாய விலை கடைகளிலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் இடம்பெற்று இருப்பதாகவும், அதேபோல், அரசு நடத்துகின்ற மதுபான கடைகளிலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் இடம் பெற வேண்டும் என பாஜக மாவட்ட நிர்வாகி சரவணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
அதில், மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் தோராயமாக 318 அரசு மதுபான கடையை பாதியாக குறைக்க வேண்டும், மேலும் அரசு அனைத்து மதுபான கடைகளும் மூடினாலும் வரவேற்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.