• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டையில் முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் விழா கோலாகலம்..,

ByS. SRIDHAR

Jun 21, 2026

தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் சார்பில் முதலமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சிலம்பம் சுற்றி பேரணியாக சென்றனர். பேரணியை அமைச்சர் முகமது பர்வேஸ் தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்தநாள் விழாவை நாளை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் சார்பில் புதுக்கோட்டையில் அண்ணா சிலையிலிருந்து 500க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் வீராங்கனைகள் சிலம்பம் சுற்றி பேரணியாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக நகர்மன்றத்தை அடைந்தனர்.

முன்னதாக பேரணியை அமைச்சர் முகமது பர்வேஸ் தொடங்கி வைத்தார் பேரணியில் மாவட்ட சிலம்பாட்டக் கழக தலைவர் கவிஞர் தங்கமூர்த்தி மாவட்ட சிலம்பாட்டக் கழக செயலாளர் செந்தில்குமார் முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் சேட்டு உள்ளிட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் விளையாட்டு ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

பேண்ட் வாத்தியங்கள் நாட்டுப்புற நடனங்கள் கட்ட கால் கலைஞர்கள் உள்ளிட்டோருடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் வீரர்கள் சிலம்பம் சுற்றி பேரணியில் கலந்து கொண்டது. அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.