• Thu. Mar 27th, 2025

‘அப்பா’ செயலியை அறிமுகம் செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ByP.Kavitha Kumar

Feb 22, 2025

அனைத்து பள்ளி பெற்றோர் ஆசிரியர் கூட்டமைப்புக்கு ‘அப்பா’ என்ற புதிய செயலியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே திருப்பெயர் கிராமத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘பெற்றோர்களைக் கொண்டாடுவோம்’ மாநாடு இன்று நடைபெற்றது. இந்த விழாவில் ‘அப்பா’ என்ற புதிய செயலியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்த விழாவில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், அன்பில் மகேஷ், உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் விழாவில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 7 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டுள்ளனர்.