• Mon. Jun 23rd, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

இன்று டெல்லி செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

ByA.Tamilselvan

Dec 31, 2022

பிரதமரின் தாயார் ஹீராபென் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்.
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி நேற்று அதிகாலை உயிரிழந்தார். தாயார் மறைவு செய்தி கேட்டதும் உடனடியாக குஜராத் சென்ற பிரதமர் மோடி, தனது தாயார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடைபெற்றது. பிரதமரின் தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
அந்த வகையில், தாயை இழந்த துயரம் எவராலும் தாங்க முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்தார். மேலும், நேற்று மாலையே பிரதமர் டெல்லி செல்வதாக இருந்தது. பிரதமரை நேரில் பார்த்து ஆறுதல் தெரிவிக்க டெல்லி செல்ல திட்டமிடப்பட்டது. ஆனால் குஜராத்தில் இருந்து பிரதமர் டெல்லிக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. அதனால், பிரதமருக்கு ஆறுதல் தெரிவிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்.