• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை

ByA.Tamilselvan

Jan 16, 2023

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தி தமிழக அரசின் விருதுகளை வழங்கினார்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். இதையடுத்து திருவள்ளுவர் விருது, தமிழக அரசின் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தில் தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.20 கோடி நிதியுதவி வழங்கினார்.