• Sun. Mar 16th, 2025

உசிலம்பட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்

ByP.Thangapandi

Mar 1, 2025

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு உசிலம்பட்டியில் திமுக நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்., நாட்டின் பிரதமர் மோடி முதல் பல கட்சி தலைவர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்., இந்நிலையில் தொகுதி வரையறை, இந்தி எதிர்ப்பு பிரச்சனைகள் பூதாகரமாகியுள்ள சூழலில் இந்தி எதிர்ப்பே எனது பிறந்த நாள் வாழ்த்து என முதல்வரும் தெரிவித்துள்ளார்.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு உசிலம்பட்டி நகர் கழகம் மற்றும் உசிலம்பட்டி வடக்கு, தெற்கு, மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் சார்பில் முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து முதல்வர் பிறந்தநாளை போராட்ட களமாக்கியுள்ளார் என்றும் அவரது ஆணைக்கிணங்க இந்தி திணிப்பிற்கு எதிராக உறுதி மொழி ஏற்க வேண்டும் என பிறந்தநாள் விழாவில் சூழுரை ஏற்கப்பட்டது.