கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் மரணம் 54_யையும் கடந்து இன்னும் 60_க்கு அதிகமானவர்கள், பாண்டிச்சேரி உட்பட பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தமிழகத்தில் மது விலக்கு காவல்துறை மற்றும் சட்ட ஒழுங்கு காவல்துறையின் செயல்பாட்டின் அலட்சியமே இத்தனை விஷ சாராய மரணத்திற்கு காரணமான தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ற கோசமிட்டபடி, பாஜகவினர் நாகர்கோவிலில் ஆட்சியாளர் அலுவலகம் முன், குமரி மாவட்ட பாஜகவின் தலைவர் தர்மராஜ் தலைமையில் மாவட்ட பொருளாளர் முத்துராமன் முன்னிலையில் ஆர்பாட்டம் நடத்தினர்.
பாஜகவின் போராட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலகம் சாலையில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
போராட்டம் நடத்திய அனேவரும் கைது செய்யப்பட்டு காவல்துறை வாகனத்தில், தனியார் கல்லூரி வாகனங்களில் ஏற்றிய காவல்துறையினர் 30 பெண்கள் உட்பட மொத்தம் 300பேரை கைது செய்தனர்.
போராட்டத்திற்கு அனுமதி கொடுக்காத நிலையில். பாஜகவினர் கூடிய உடனே கைது செய்யப்பட்டு காவல்துறை வாகனத்தில் ஏற்றபட்ட நேரத்தில் கிடைத்த அவகாசத்தில். பாஜகவினர் தமிழக முதல்வருக்கு எதிராக கோசம் இட்டனர்.