நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் 12 மணிநேர வேலை மசோதா மசோதா திரும்பப் பெறப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்
தொழிலாளர் தினமான இன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள நினைவு சின்னத்திற்கு தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு உரையாற்றினார். தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகளின் எதிர்ப்பால் 12 மணிநேர வேலை மசோதா நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த மசோதா திரும்பப் பெறப்படுவதாக அறிவித்தார். மேலும் மசோதா திரும்பப் பெறுவது குறித்து விரைவில் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவருக்கும் எழுத்துப் பூர்வமாக தெரிவிக்கப்படும் என்றும் தொழிலாளர் நலனில் என்றும் சமரசம் செய்யமாட்டோம் எனவும் முதலமைச்சர் கூறினார்.