• Fri. Mar 29th, 2024

சென்னை ஓபன் டென்னிஸ் – 2-வது சுற்று இன்றுடன் நிறைவு

ByA.Tamilselvan

Sep 15, 2022

டென்னிஸ் உலகின் முக்கிய தொடரான டபிள்யு.டி.ஏ தொடரின் 7-வது சீசன் சென்னை நகரில் நடைபெற்று வருகிறது. மகளிர் மட்டும் பங்கேற்கும் இந்த சர்வதேச தொடர் செப்., 12-ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் தொடங்கியது. தற்போது இந்த தொடர் பாதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஒற்றையர் பிரிவில் வியாழனன்று 2-வது சுற்று ஆட்டங்கள் நிறைவு பெறுகிறது. இரட்டையர் பிரிவிலும் 2-வது சுற்று ஆட்டங்கள் ஏறக்குறைய இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ளது. ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டங்கள் வெள்ளியன்று தொடங்கு கிறது. இரட்டையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டங்கள் நிறைவு பெறும் நேரத்தை பொறுத்து காலிறுதி ஆட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *