

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து சென்னைக்கு ரயில் சேவை தொடங்க உள்ளதற்கான அறிவிப்பு ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் – மதுரை இடையிலான மீட்டர் கேஜ் பாதை கடந்த டிசம்பர் 31, 2010 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டு அகல ரயில் பாதை திட்டப் பணிகள் தொடங்கி 12 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்தது. இருப்புப்பாதை அமைக்கும் பணிகள் தேனி வரை முடிவடைந்த நிலையில்,கடந்த வருடம் (2022) மே மாதம் 26 ஆம் தேதி முதல் தேனியில் இருந்து மதுரை வரையிலான பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டது.
ரயில் பாதை பணி நிறைவடைந்ததையொட்டி, டிசம்பர் மாதம் 29ஆம் தேதி போடியில் இருந்து தேனி வரை தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ஆய்வு செய்தார். தற்போது தேனி மற்றும் மதுரை மாவட்ட மக்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையாக இருந்த போடிநாயக்கனூர் முதல் சென்னை வரை ரயில் சேவை திட்ட பணிகள் தொடங்கப்படும் எனரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.பிப்.19 முதல் சென்னை – போடிக்கு ரயில் சேவை தொடங்கும் என தெரிகிறது.

