• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

நடிகர் வடிவேலுவின் தாயார் காலமானார்..!

ByA.Tamilselvan

Jan 19, 2023

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார்.சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி (எ) பாப்பா மதுரை வீரகனூரில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 87. தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இவருடைய தாய் வைத்தீஸ்வரி என்ற பாப்பா (87). மதுரை வீரகனூரில் வசித்துவந்த இவர், உடல்நலக் குறைவால் நேற்று இரவு காலமானார். தாயாரை இழந்து தவிக்கும் வடிவேலுவுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.