சுப்ரீம் கோர்டின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித், அடுத்த மாதம் 8-ந்தேதி ஓய்வு பெறுகிறார். அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை சிபாரிசு செய்யுமாறு தற்போதைய தலைமை நீதிபதியிடம் மத்திய அரசு கேட்பது வழக்கம். அதுபோல், அடுத்த தலைமை நீதிபதி பெயரை சிபாரிசு செய்யக்கோரி, கடந்த 7-ந்தேதி மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு, தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு கடிதம் எழுதினார். இந்தநிலையில், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பெயரை அடுத்த தலைமை நீதிபதி பதவிக்கு யு.யு.லலித் சிபாரிசு செய்துள்ளார்.
தனக்கு அடுத்த இடத்தில் உள்ள மிக மூத்த நீதிபதியை தலைமை நீதிபதி சிபாரிசு செய்வது வழக்கம். அதற்கேற்ப யு.யு.லலித் சிபாரிசு செய்துள்ளார். நீதிபதி சந்திரசூட், நவம்பர் 9-ந்தேதி புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்கிறார். அவர் நாட்டின் 50-வது தலைமை நீதிபதி ஆவார். 2 ஆண்டுகள், அதாவது 2024-ம் ஆண்டு நவம்பர் 10-ந் தேதிவரை அப்பதவியில் இருப்பார். நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீண்ட காலம் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த ஒய்.வி.சந்திரசூட்டின் மகன் ஆவார். அமெரிக்காவில் ஹார்வர்டு சட்ட பல்கலைக்கழகத்தில் எல்.எல்.எம். பட்டமும், டாக்டர் பட்டமும் பெற்றார். சுப்ரீம் கோர்ட்டிலும், மும்பை, குஜராத், கொல்கத்தா, அலகாபாத், மத்தியபிரதேசம், டெல்லி ஆகிய ஐகோர்ட்டுகளில் வக்கீலாக பணியாற்றினார்.
சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட் தேர்வு
