
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னெடுப்பில் 17 அரசியல் கட்சிகள், 44 இயக்கங்கள் பங்கேற்கும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
சென்னை அண்ணா சாலையில் நடைபெறும் மனித சங்கிலி பேரணியில் வைகோ, திருமாவளவன், கி.வீரமணி, வேல்முருகன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் 17 கட்சிகளும் 44 இயக்கங்களும் பங்கேற்பார்கள், பல லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர் என திருமாவளவன், வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் அறிவித்திருந்தனர்.
மத அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயலும் பிரிவினைவாதிகளை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்பதை வலியுறுத்தி இந்த சமூக நல்லிணக்கப் பேரணி நடைபெறுகிறது. சென்னையில் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது..
காந்தி ஜெயந்தி அன்று ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தமிழகத்தில் 51 இடங்களில் பேரணி நடத்தத் திட்டமிட்டது. அதை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னெடுப்பில் சமூக நல்லிணக்க பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டு அடுத்த மாதம் அந்தப் பேரணி நடைபெற இருக்கும் நிலையில், இன்று சமூக நல்லிணக்கப் பேரணியை விசிக உள்ளிட்ட கட்சிகள் நடத்தின.இதுதொடர்பாக அக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டறிக்கை விடுத்திருந்தனர். ஊபா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஆர்எஸ்எஸ் பயங்கரவாத கூட்டத்தை வேரறுப்போம் என இந்த மனிதச் சங்கிலி பேரணியில் முழக்கம் எழுப்பப்பட்டது.
