• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

Byகாயத்ரி

Jan 15, 2022

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று கடலோர மாவட்டங்கள், மற்றும் அதைச் சுற்றியுள்ள உள் மாவட்டங்களிலும், தென் மாவட்டங்கள், காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாக இருக்கும்’ என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

`15 மற்றும் 16ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.அதேபோல, 17 மற்றும் 18ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.