தொடர் கனமழை காரணமாக திருப்பதி மலைப்பாதையில் மண்சரிவு ஏற்ட வாய்ப்புள்ளதால் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.
தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகாவிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூரில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருமலையில் 10 சென்டி மீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது.
தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் ஏழுமலையான் கோயில் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் அங்கு இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.