• Fri. Apr 19th, 2024

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் கணினி

Byகாயத்ரி

Nov 12, 2021

ஆப்பிள் நிறுவனத்தின் மிகவும் அரிதான ஹவாய் கோவா மரத்தால் செய்யப்பட்ட ஆப்பிள் 1 இன்னும் கூட செயல்படுகிறது. 1976-ம் ஆண்டு, வெளியான 200 ஆப்பிள் 1 கணினிகளில் இதுவும் ஒன்று.


தற்போது ஏலம் விடப்பட்டுள்ள இந்த கணினியை இதுவரை 2 பேர் மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். முதலில் இந்த கணினி கல்லூரி பேராசிரியர் ஒருவரிடம் இருந்துள்ளது.அதை தனது மாணவர்களில் ஒருவருக்கு அவர் 650 டாலருக்கு விற்றுள்ளார். இந்த கணினியுடன் இரண்டு கேசட் டேப்களில் ஆப்பிள் நிறுவனத்தின் பயனர் கையேடுகள் மற்றும் ஆப்பிள் மென்பொருள் ஏலத்தில் விடப்பட்டுள்ளது.


இதுகுறித்து ஆப்பிள் 1 நிபுணர் கோரி கோஹன் கூறுகையில், “இது விண்டேஜ் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கணினி தொழில்நுட்ப காதலர்களின் சொர்க்கம். இந்த கணினி மிகவும் உற்சாகம் தரும் பொருட்களில் ஒன்று என்பதில் சந்தேகம் வேண்டாம்” என்றார்.


கணினித் உற்பத்தியில் மிக முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்த நிறுவனம் ஆப்பிள். ஒரு காலகட்டத்தில் பல்கலைக்கழகங்களிலும் பெரும் பணக்காரர்களிடம் மட்டுமே இருந்த கணினிகளை அனைத்து தரப்பினரிடையே எடுத்து சென்றதில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு மிக முக்கியமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *