ராஜராஜசோழனின் 1036ஆவது சதய விழாவை முன்னிட்டு நாளை தஞ்சையில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாமன்னன் ராஜராஜ சோழனின் 1036ஆவது சதய விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக 2 நாட்கள் நடைபெறும் இவ்விழா, கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டைப் போல நடப்பு ஆண்டும் ஒருநாள் மட்டுமே நடத்தப்படுகிறது.
நாளை காலை 7 மணிக்கு பெரிய கோயிலுக்கு வெளியே உள்ள மாமன்னன் ராஜராஜ சோழன சிலைக்கு மாலை அணிவித்தல், 9 மணிக்கு பெருவுடையாருக்கு 36 வகை பொருட்களால் பேரபிஷேகம், பிற்பகல் 1 மணிக்கு பெருந்தீப வழிபாடு, மாலை 6 மணிக்கு கோயில் பிரகாரத்துக்குள் சுவாமி புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.இந்நிலையில் நாளை ஒரு நாள் தஞ்சையில் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.