• Sun. Apr 5th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு பெய்ய வாய்ப்பு

Byமதி

Nov 19, 2021

அந்தமானில் உருவான அந்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மழை வெளுத்து வாங்கியது. தமிழகம் முழுவதுமே பரவலாக மழை பெய்தது. புதுச்சேரியில் கனமழை கொட்டியது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கும் – சென்னைக்கும் இடையே இன்று காலை கரையை கடந்தது என்று வானிலைமையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, இன்று திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், திருப்பூர், கோவை, நாமக்கல் ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், சென்னை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் இன்று பெய்யக்கூடும்.

தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.