• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

25ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்

ByA.Tamilselvan

Dec 22, 2022
Rain

இலங்கை பகுதியை நோக்கி நகரம் காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழக தென்கடலோர பகுதியில் டிச.25ம் கனமழைக்குவாய்ப்புள்ளதாக வானிலைமையம் தெரிவித்துள்ளது.
இலங்கை கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு- தென்மேற்கு திசையில் இலங்கை பகுதியை நோக்கி நகரக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென்கடலோர பகுதியில் ஓரிரு இடங்களில் வரும் டிசம்பர் 25ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.