• Wed. Oct 21st, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

கோவை ஆர்.எஸ்.புரத்தில் திடீரென சாய்ந்து விழுந்த பெரிய மரம்..,

BySeenu

Oct 21, 2026

​கோவை மாநகரின் முக்கியப் பகுதியான ஆர்.எஸ்.புரம் (RS Puram) பகுதியில் நேற்று எதிர்பாராதவிதமாகப் பெரிய மரம் ஒன்று திடீரெனச் சாய்ந்து விழுந்த விபத்தில், அவ்வழியாகச் சென்ற மூன்று பேர் நூலிழையில் உயிர் தப்பிய சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகிக் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
​
கோவையில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் காற்றின் தாக்கம் காரணமாக மரங்கள் பலவீனமடைந்து சாய்ந்து விழுந்து வருகின்றன. இந்நிலையில், ஆர்.எஸ்.புரம் பகுதியில் வழக்கம் போல் பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக இருந்த அப்பகுதியில் திடீரெனப் பெரிய மரம் ஒன்று எதிர்பாராத விதமாகச் சாய்ந்து விழுந்தது. மரம் முழுவதுமாகச் சாலையில் முறிந்து விழுந்த சத்தத்தைக் கேட்டு அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.
​
​ அந்த மரத்தின் அருகே உள்ள ஒரு வணிகக் கடையில் இருந்து வெளியே வந்து கொண்டு இருந்த மூன்று பேர், மரம் திடீரெனச் சாய்வதை நொடிப் பொழுதில் உணர்ந்தனர். உடனடியாக அவர்கள் சுதாரித்துக் கொண்டு பின்னோக்கி ஓடியதால், பெரும் விபத்தில் சிக்காமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஒரு சில நொடிகளில் மரம் அவர்கள் நின்று கொண்டு இருந்த இடத்தின் மீது விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

​விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும், மாநகராட்சி மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக விரைந்து வந்து போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

விழுந்த மரத்தை வெறும் 3 மணி நேரத்திற்குள் முழுமையாக வெட்டி அகற்றி, அப்பகுதியில் தடைபட்டு இருந்த வாகனப் போக்குவரத்தை வெற்றிகரமாகச் சீரமைத்தனர்.
​

தற்போது இந்த விபத்தின் போது பதிவான சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவதுடன், மழைக் காலங்களில் பழைய மற்றும் பலவீனமான மரங்களை அடையாளம் கண்டு அவற்றை அகற்றும் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.