திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவர்களின் தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும் வகையில் கரூர் பகுதியில் உள்ள அல்ட்ராடெக் தனியார் சிமென்ட் ஆலை சார்பில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர்கள் வழங்கும் விழா நடந்தது.

விழாவிற்கு அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ரேணுகாதேவி தலைமையேற்று பேசினார். மேலாளர் மூர்த்தி வரவேற்று பேசினார்.
விழாவில் அல்ட்ராடெக் தனியார் சிமென்ட் ஆலை நிதி மற்றும்
வணிக துறை தலைவர் விஜய் பாரிக், மனிதவள மேலாளர் முகமது இஸ்மாயில் , சமூகநல அலுவலர் டேனியல் ஆரோக்கியராஜ் ஆகியோர் கணினிகளை வழங்கி பேசினார்கள்.

மாணவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்ப பயிற்சிக்கு இந்த கணினிகள் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அரசு தொழில் பயிற்சி மாணவ, மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.




