• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

OPPO, Realme ப்ராண்ட் ஸ்மார்ட் போன்களுக்கு மத்திய அரசு தடை..??

Byகாயத்ரி

Aug 9, 2022

இந்தியாவில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் விற்பனையில் சீன நிறுவனங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் சந்தையில் ஜியோமி, ஓப்போ மற்றும் ரியல் மீ உள்ளிட்ட நிறுவனங்கள் 80 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை கொண்டுள்ளன .

இந்த நிலையில் சீனாவின் பட்ஜெட் ஸ்மார்ட் போன்கள் 12 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் விற்பனை ஆகி கொண்டிருக்கும் நிலையில் சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் விற்க தடை விதிக்கப் பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் முடங்கி போயிருக்கும் இந்திய பிராண்டுகளுக்கு புத்துயிர் ஊட்ட இந்த தடையை அரசு கொண்டுவர உள்ளது. ஏற்கனவே 5 ஜி துறையில் சீன நிறுவனங்களை அரசு தவிர்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.