• Mon. Jul 13th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் வீட்டில் FBI சோதனை…

Byகாயத்ரி

Aug 9, 2022

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வீட்டில் FBI (புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம்) அதிகாரிகள் திடீரென சோதனை செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்து பதவி விலகும் முன்னர் வெள்ளை மாளிகையில் உள்ள பல்வேறு ஆவணங்களை வீட்டுக்கு எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் FBI அதிகாரிகள் இன்று திடீரென மாளிகையில் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சோதனை இன்று காலை முதல் நடைபெற்று வருவதாகவும் இதுவரை எந்தவிதமான ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.