• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

புதிய இல்லத்தை மத்திய குழு உறுப்பினர் பி.சண்முகம் திறந்து வைத்தார்…

விழுப்புரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருவெண்ணெய்நல்லூர் வட்ட செயலாளர் கே.சிவக்குமார் கட்டி முடிக்கப்பட்ட புதிய இல்லத்தை கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பி.சண்முகம் திறந்து வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றியம் காரப்பட்டு ஊராட்சியில் வியாழக்கிழமை கட்சியின் வட்ட செயலாளர் கே.சிவக்குமார் புதிதாக கட்டியுள்ள இல்லத்தினை மத்திய குழு உறுப்பினர் பி.சண்முகம் மாநில குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் தலைமையில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். அப்போது முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.ராதாகிருஷ்ணன், பி.குமார், எஸ்.முத்துக்குமரன், எஸ்.கீதா, ஆர்.மூர்த்தி,சே.அறிவழகன், வட்ட செயலாளர்கள் ஆர்.கண்ணப்பன், எஸ்.கணபதி, ஒன்றிய செயலாளர் உலகநாதன்,தவிச மாவட்ட தலைவர் ஆர் ‌தாண்டவராயன், மாவட்ட குழு வீரமணி, வி.தொச எஸ்.அபிமண்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.