• Thu. May 9th, 2024

விழுப்புரம் அருகே தார் தொழிற்சாலை தடுத்திடுக தவிச பி.சண்முகம் பேட்டி

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காந்தலவாடி ஊராட்சியில் அமைய உள்ள தார் தயாரிக்கும் தொழிற்சாலையை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பி.சண்முகம் வலியுறுத்தி உள்ளார்.

விழுப்புரம் வந்திருந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பி.சண்முகம் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசூர் அருகேவுள்ள காந்தலவாடி ஊராட்சியில் விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் ஏரிக்கு அருகே நீர் ஆதாரம் பாதிக்கும் வகையிலும்,பொதுமக்களுக்கு மர்ம நோய்களை ஏற்படுத்தும் வகையில் அமையவுள்ள தார் தொழிற்சாலையை நேரில் சென்று பார்வையிட்டார், தொடர்ந்து இங்கு உள்ள விவசாய நிலம் மற்றும் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதரமான ஏரியின் அருகே எந்த அனுமதியும் இல்லாமல் பொது மக்கள் பாதிக்கப்படும் வகையில் விவசாயத்தையும், நீர் வளத்தையும், பாதிக்கும் வகையில் தார் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. இதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் என்றும் , மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இந்த தார் தொழிற்சாலையை தடுத்து நிறுத்த முன்வரவேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கேட்டு கொள்கிறேன் என அவர் தெரிவித்தார்.

அப்போது தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.ராதாகிருஷ்ணன், பி.குமார் எஸ்.முத்துக்குமரன், எஸ்.கீதா , மாவட்ட குழு உறுப்பினர்கள் கே.வீரமணி, வட்ட செயலாளர் எஸ்.கணபதி, விவசாயிகள் சங்கம் வட்ட செயலாளர் பி.தங்கவேல், சிபிஎம் வட்ட குழு பி.பழனி உட்பட பலர் உடனிருந்தனர். தொடர்ந்து காந்தலவாடியில் கட்சியின் செங்கொடியை கிளை செயலாளர் கே.மணிகண்டன் தலைமையில் ஏற்றி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *