• Mon. May 20th, 2024

விழுப்புரத்தில் மாற்றுதிறனாளிகள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பு செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு சங்கத்தின் கோலியனூர் ஒன்றிய தலைவர் எம்.மும்மூர்த்தி தலைமை தாங்கினார், ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் மாநில துணைத்தலைவர் வி.ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் விரைந்து இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் அறிவித்தார், விக்கிரவாண்டி வட்டம், தென்னமாதேவி ஊராட்சியை சேர்ந்த வீட்டுமனை இல்லாத 14 மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை வழங்கக்கோரி பலமுறை விண்ணப்பித்தும் நடவடிக்கை இல்லாததால் கடந்த 20-09-2023-ல் சங்கத்தின் சார்பில் விக்கிரவாண்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விக்கிரவாண்டி வட்டாட்சியர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக அறிவித்து உரிய ஆய்வுகள் மேற்கொண்டு திருவாமாத்தூர் ஊராட்சியில் புல எண். 356/ 1-ல் 1.09.0 ஏர்ஸ் 0.1120 ச.மீட்டர் மாற்றுத்திறனாளிகள் 14 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்க புலன் அறிக்கையை இறுதி செய்து 11.10.2023-ல் விழுப்புரம் கோட்டாட்சியருக்கு சமர்ப்பித்து விட்டார்.

ஆனால் அந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர்களிடம் பலமுறை நேரில் வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

அதனால் உடனடியாக மாநில முதல்வரின் அறிவிப்பை செயல்படுத்த வேண்டுமென மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம். அரசு நிர்வாகம் விரைந்து கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் பி.முருகன்,ஜி.மாவட்ட பொருளாளர் ஜெயக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் எம்.முத்துவேல், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஏ.மணிகண்டன், கே.மோகன் ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *