

இந்தியாவிலேயே முதல் முறையாக மதுரையில் திருநங்கைகளுக்காக திறக்கப்பட்ட ஆய்வு மற்றும் ஆவண மையம்திறக்கப்பட்டுள்ளது. திரைப் படைப்புகளில் திருநங்கைகளின் பங்களிப்பை அதிக்கப்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும்.
மதுரை விஸ்வநாதபுரம் பகுதியில் திருநங்கைகளுக்கான முதல் நூலகம் சில ஆண்டுகளுக்கு முன்பாக துவங்கப்பட்டது. இந்நிலையில் மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியில் திருநங்கைகளுக்கான ஆய்வு மற்றும் ஆவண மையம் இன்று திறக்கப்பட்டது. இதில் மூன்றாம் பாலினத்தவரின் மீது சமுகத்திற்கு இருக்கும் கருத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக திருநங்கை, திருநம்பி எழுத்தாளர்களை ஊக்குவித்து அவர்களின் எழுத்துக்களாக நூல்களாக மாற்றுவது, திறமை உள்ள திருநம்பி மற்றும் திருநங்கைகளை கண்டறிந்து அவர்களுக்கான களத்தை அமைத்துக் கொடுப்பதற்காக இந்த ஆய்வு மற்றும் ஆவண மையம் திறக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து பேசிய ஆவண மையத்தின் நிர்வாகி
பிரியா பாபு : இதுபோன்ற திருநங்கைகளுக்கு ஆய்வு மற்றும் ஆவண மையம் இந்தியாவிலேயே முதன் முறையாக மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது. இன்று இந்த மையத்தில் 180க்கும் அதிகமான திருநங்கை சார்ந்த நூல்களும்,பத்தாயிரத்துக்கும் அதிகமான திருநங்கை குறித்து கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன இது திருநங்கை சமுதாயத்தைப் பற்றிய புரிதலை சாமானிய மக்களுக்கு ஏற்படுத்தும் என்றார்.
