வாடிய பயிரை கண்ட போதெல்லாம் நானும் வாடினேன், பசித்தவர்களுக்கு சாதி மதம் இனம் மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும் என பல்வேறு கருத்துக்களை இந்த உலகில் விதைத்துச் சென்றவர் வள்ளலார் பெருமகனார் அன்னாருடைய 199 ஆண்டு பிறந்தநாள் அவதார தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று நாகர்கோவில் வடசேரியில் உள்ள வள்ளலார் அமைப்பின் சார்பாக ஏழை மக்களுக்கு உணவுகள் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன. காவல்துறை துணை கண்காணிப்பாளர் கணேசன் மற்றும் இந்த அமைப்பின் தலைவர் பத்மேந்திரா சுவாமிகள் ஆகியோர் அருட்பெரும் ஜோதியை ஏற்றி வைத்தனர்.