• Sat. Apr 20th, 2024

மீனவர் அடித்து கொலை வைரலாகும் சிசிடிவி காட்சிகள்

கன்னியாகுமரி மாவட்டம் குறும்பனை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் 55 வயதான புருனோ விசைப்படகுகளை பழுது பார்ப்பதும் ஆழ்கடலில் சிக்கி நிற்கும் படகுகளை பைபர் படகுகளால் மீட்டு வரும் பணியில் ஈடுபட்டு வந்த இவர் கடந்த காலங்களில் மாநிலம் விட்டு மாநிலங்களுக்கு மீன்பிடி தொழிலுக்கு சென்று வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் கழிந்த மாதம் மீன்பிடி தொழிலுக்கு சென்று சொந்த ஊர் திரும்பிய இவர் தனது சகோதரியிடம் தனது சொத்தில் உள்ள பங்கை கேட்டுள்ளார் பதிலளித்த சகோதரி 27-ம் தேதி வீட்டில் வந்து பேசுமாறு அழைத்த நிலையில் அன்றும் பேச்சுவார்தைக்கு தங்கை தயாராக இல்லாத இல்லை. கடந்த 2-ம் தேதி புருனோ சகோதரியின் வீட்டிற்கு குடி போதையில் சென்று ஞாயம் கேட்டபோது அனைவரும் சேர்ந்து தாக்கி விட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சேர்த்ததோடு 44 வயதான அந்தோணி என்பவர் புருனோ வை தாக்கி விட்டதாக கருங்கல் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.போலீசாரும் அடி தடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் புருனோ மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனையடுத்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து அந்தோணி என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தன்ர இத்தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இது தொடர்பாக குளச்சல் உட்கோட்ட டி.எஸ்.பி. தங்கராமன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது சிசிடிவி காட்சிகள் கிடைத்து விட்டதாகவும் காவல் அதிகாரிகள் சரியாக புலன் விசாரணை நடத்தாததால் ஏற்பட்ட பிரச்சனை எனவும் இது தொடர்புடைய இரு நபர்களை கைது செய்து விட்டதாகவும் விளக்கமளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *