

சிவகங்கை மஜீத் ரோடு பகுதி நியாய விலை கடை அருகே சாலையோர முட்புதரில் பச்சிளம் குழந்தை ஒன்று உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை கண்டுஅவ்வழியே சென்றவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், பிளாஸ்டிக் பையில் மூடப்பட்டிருந்த குழந்தையின் உடலை மீட்டு,உடற்கூறு ஆய்விற்காக,சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்பு அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு, பச்சிளம் குழந்தையின் உடலை முட்புதரில் வீசி சென்ற நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
