• Sun. May 12th, 2024

போலி வலைத்தள கணக்குகளை வெளியிட்ட சிபிஎஸ்ஸி

Byவிஷா

Feb 13, 2024

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ போலியான 30 சமூக வலைதள கணக்குகளை கண்டறிந்து அவற்றை விளம்பரப் படுத்துவதன் மூலம் சிபிஎஸ்இ தொடர்பான தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுத்திருக்கிறது.
‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் அதன் அதிகாரப்பூர்வ கணக்கை குறிப்பிட்டுள்ள சிபிஎஸ்இ பயனர்கள் இந்த கணக்கை பின்தொடருமாறு அறிவுறுத்தி இருக்கிறது. இதன்படி சிபிஎஸ்சி அதிகாரப்பூர்வ கணக்கு ‘@cbseindia29’ என இந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது. மேலும் சிபிஎஸ்இ நிறுவனத்தின் லோகோ மற்றும் பெயர்களை பயன்படுத்தி தவறான தகவல்களை வெளியிட்டு வரும் 30 ‘எக்ஸ்’ கணக்குகளை பட்டியலிட்டு இருக்கிறது. சிபிஎஸ்சி தொடர்பான தகவல்களுக்கு அதன் அதிகாரப்பூர்வ கணக்கை பின்தொடருமாறு அறிவுறுத்தியதோடு பட்டியலிடப்பட்ட இந்த 30 கணக்குகளையும் பின் தொடர வேண்டாம் எனவும் அறிவித்திருக்கிறது.
சிபிஎஸ்இ தங்களது பெயரில் இருக்கும் போலி கணக்குகளை மக்களுக்கு அடையாளப்படுத்துவதன் மூலம் மோசடி நடவடிக்கைகளில் மக்கள் ஏமாற்றப்படுவதை தடுக்க உறுதி ஏற்பதாக தெரிவித்துள்ளது. மேலும் சிஎஸ்ஐ தொடர்புடைய தகவல்களுக்கு அதன் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ தளத்தை பயனர்கள் பின் தொடரும் மாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
போலி சமூக ஊடக கணக்குகள் தொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில் சமூக வலைதளங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை குறிப்பிட்டுள்ளது. தவறான தகவல்கள் தொடர்ந்து பரவி வருவதால், இது அதிக முக்கியத்துவம் பெறுகிறது. தேர்வு மற்றும் தேர்வு முடிவுகள் பற்றிய அப்டேட்களுக்கு அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தை பின் தொடர வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைக்கிறது. முக்கியமான கல்வி காலங்களில் சரி பார்க்கப்பட்ட ஆதாரங்களை மட்டுமே பின் தொடர வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *