3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
தமிழகத்தில் நாளை முதல் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தமிழக துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில்…
வட மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திரா நோக்கி நகர்வதால், வட மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக சென்னை வானிலை…
இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுப்பு
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்வதன் காரணமாக, இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விருதுநகர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தென்கிழக்கு வங்கக்கடல்…
தமிழ்நாட்டில் டிச.18 வரை கனமழைக்கு வாய்ப்பு
வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் டிச.18ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவானது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், டிசம்பர் 18ம்…
மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் : விவசாயிகள் வேதனை
தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 4 நாட்களாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.…
கனமழை எதிரொலி : 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை எதிரொலியாக இன்று 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.குமரிக்கடலில் நீடித்த தாழ்வு பகுதி லட்சதீவுகள் பகுதி நோக்கி நகர்ந்துள்ளது. இதன் காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இன்றும் மழை தொடரும் என டெல்டா…
சென்னையில் 13 விமானங்கள் ரத்து
கனமழை காரணமாக சென்னை விமானநிலையத்தில் இருந்து புறப்படும் 13 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.வங்கக்கடலில் உருவாகியிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரேநாளில் 13 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதன்படி…
கனமழையால் பல மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர்,…
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மெல்ல மெல்ல கரையை நோக்கி…





