சென்னையில் போகிப் பண்டிகை புகை, பனிமூட்டத்தால் விமானங்கள் ரத்து!
சென்னையில் போகிப் பண்டிகை புகை, பனிமூட்டம் எதிரொலியாக 30 விமானங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மேலும் டெல்லி, பெங்களூருவில் இருந்து அதிகாலை சென்னை வரவேண்டிய 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தைத்திருநாளை வரவேற்கும் பொருட்டு போகிப் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு…
தமிழகத்தில் இன்று முதல் 18-ம் தேதி வரை மழை பெய்யும்!
தமிழகத்தில் இன்று முதல் வரும் 18-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: கிழக்கு இலங்கை கடல் மற்றும் அதையட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும்…
தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை கொண்டாட்டம்!
தமிழ்நாடு முழுவதும் போகிப் பண்டிகையை மக்கள் இன்று கொண்டாடி வருகின்றனர். தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று, அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறதுபொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து…
புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த குழு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!
தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த குழு அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் 20 ஆண்டுகளுக்கு முன் பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இப்போது அந்த…
இடி, மின்னலுடன் டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழை!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகத்தில் தஞ்சாவூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை(ஜனவரி 11) கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடதமிழகம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் வளிமண்டல…
பீஃப் கடைக்கு மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி மீது 4 பிரிவுகளில் வழக்கு!
கோவையில் பீஃப் கடை நடத்திய தம்பதியினரை மிரட்டிய பாஜக நிர்வாகி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் உடையாம்பாளையம் பகுதியில் தள்ளுவண்டியில் தம்பதியினர் பீஃப் கடை நடத்தி வந்தனர். அப்பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி சுப்ரமணி என்பவர் பீஃப்…
மஞ்சள் அறுவடை பணிகள் விரைவில் தொடக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மஞ்சள் அறுவடை பணிகள் விரைவில் தொடங்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையின்போது, பொங்கல் வைக்கும் பானையில் மஞ்சள் செடி மங்கல அடையாளமாக கட்டப்படுகிறது. மஞ்சள் கட்டப்பட்ட பானையில் பொங்கும் பொங்கல், அந்த வீட்டின் வளத்தை…
அதிமுக பக்கம் திரும்பாத கேமராக்கள் : இ.பி.எஸ் குற்றச்சாட்டு
தமிழக சட்டப்பேரவையில் நடக்கும் நிகழ்வுகள் சபாநாயகரோடும், திமுக உறுப்பினரோடும் படம் பிடிக்கும் கேமராக்கள் எங்கள் பக்கம் திரும்புவதில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் 4வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் அதிமுக…
‘யார் இந்த ரங்கராஜன் நரசிம்மன்?’ – பின்னணி குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
கோயில்கள் தொடர்பாக வழக்குத் தொடரும் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் பின்னணி குறித்து விசாரிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ரங்கராஜன் நரசிம்மன் வழக்குத் தொடுத்திருந்தார். அதில், ஸ்ரீரங்கம் கோயிலில்…
பொங்கல் பரிசு தொகுப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்!
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 2025-ம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு…




