ஒவ்வொரு மாநில மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்கிறோம்- அமைச்சர் அமித் ஷா பேச்சு
ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகிலுள்ள தக்கோலத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) ஆட்சேர்ப்பு பயிற்சி மையம் (ஆர்டிசி) செயல்பட்டு…
இங்கிலாந்தில் அமைச்சர் ஜெய்சங்கரை தாக்க முயற்சி- இந்தியா கண்டனம்!
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மீது இங்கிலாந்தில் காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி செய்ததற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்துக்கு 6 நாட்கள் அரசுமுறைப் பயணமாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சென்றுள்ளார். முதற்கட்டமாக மார்ச் 4-ம் தேதி…
சிதறிய ஜன்னல் கண்ணாடிகள்- பாட்னா பல்கலைக்கழக வளாகத்தில் பயங்கர குண்டுவெடிப்பு!
பாட்னா பல்கலைக்கழக வளாகத்தில் குண்டு வெடிப்பு நடைபெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம், பாட்னாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தேர்தல் மார்ச் 29-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 10-ம் தேதி முதல் தொடங்கப்படும்…
உ.பி ரயில்வே தேர்வில் முறைகேடு செய்த 26 பேர் கைது- சிபிஐ அதிரடி!
உத்தரப் பிரதேசத்தில் ரயில்வே தேர்வில் முறைகேடு செய்த 9 அதிகாரிகள் உள்பட 26 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1 கோடியே 17 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், முகல்சாராயில் தலைமை லோகோ பைலட் பதவி…
அலைமோதும் கூட்டம் – அயோத்தி ராமர் கோயிலில் தரிசன நேரம் மாற்றம்
அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் காலையில் கோயில் திறக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த ஆண்டு ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் இக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் இந்தியா மட்டுமின்றி…
‘அயன்’ படப்பாணியில் ரூ.10 கோடி போதைப்பொருள் கடத்திய பெண்!
‘அயன்’ படப்பாணியில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் அடங்கிய கேப்சூல்களை வயிற்றில் விழுங்கி கடத்தி வந்த பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு…
குளித்தால் நோய் வருமா? – கங்கை நதி குறித்து பீகாரின் அதிர்ச்சி அறிக்கை!
பீகாரில் பெரும்பாலான இடங்களில் கங்கை நீர் குளிப்பதற்கு உகந்ததாக இல்லை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநில சட்டப்பேரவையில் சமீபத்தில் 2024-2025 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பீகாரில் உள்ள கங்கை நதி நீரின் தரம்…
பங்குச்சந்தை மோசடி – செபியின் முன்னாள் தலைவர் மாதவி மீது வழக்கு
பங்குச்சந்தை மோசடி வழக்கில் பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவராக இருந்த மாதவி புரி புச் மீது வழக்குப்பதிவு செய்ய மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பங்குச்சந்தை கண்காணிப்பு அமைப்பான செபியின் தலைவராக இருந்தவர் மாதவி புரி புச். இவர் தனது…
உத்தராகண்டில் பனிச்சரிவில் சிக்கிய 47 பேர் மீட்பு – 8 பேரை தேடும் பணி தீவிரம்
உத்தராகண்ட்டில் பனிச்சரிவில் சிக்கிய 47 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 8 பேரை 4 ஹெலிகாப்டர்களின் உதவியுடன் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உத்தாரகண்டில் இந்திய- திபெத் எல்லையை ஒட்டி 3200 மீட்டர் உயரத்தில் மனா கிராமம் உள்ளது. பத்ரிநாத்தில் இருந்து 3…
தெலங்கானாவில் சுரங்க விபத்து: ஒரு வாரத்திற்குப் பின் 8 பேர் சடலமாக மீட்பு!
தெலங்கானாவில் நடைபெற்ற சுரங்க நிலச்சரிவில் சிக்கிய 2 பொறியாளர்கள் உள்பட 8 பேரும் ஒரு வாரத்திற்குப் பின் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம் அம்ராபாத்தில் ஸ்ரீசைலம் அணை உள்ளது. இந்த அணையின் பின்புறத்தில் இருந்து நல்கொண்டா மாவட்டத்திற்கு குடிநீர்…




