• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • குறள் 158:

குறள் 158:

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்தகுதியான் வென்று விடல். பொருள் (மு.வ): செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.

குறள் 157:

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்துஅறனல்ல செய்யாமை நன்று. பொருள் (மு.வ):தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.

குறள் 156:

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றுந் துணையும் புகழ்.பொருள் (மு.வ):தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.

குறள் 155:

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.பொருள் (மு.வ): ( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால்இ பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.

குறள் 154:

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமைபோற்றி யொழுகப் படும்.பொருள் (மு.வ):நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.

குறள் 153:

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்வன்மை மடவார்ப் பொறை. பொருள் (மு.வ): வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.

குறள் 152:

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனைமறத்தல் அதனினும் நன்று.பொருள் (மு.வ):வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.

குறள் 151:

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை  இகழ்வார்ப் பொறுத்தல் தலை. பொருள் (மு.வ): தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்.

குறள் 150:

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்பெண்மை நயவாமை நன்று.பொருள் (மு.வ):ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது.

குறள் 149:

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.பொருள் (மு.வ):கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றொல் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்.