• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • குறள் 259

குறள் 259

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்உயிர்செகுத் துண்ணாமை நன்று. பொருள் (மு.வ): நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.

குறள் 258:

செயிரின் தலைப்பிரிந்த காட்சியா ருண்ணார்உயிரின் தலைப்பிரிந்த ஊன் பொருள்(மு.வ): குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.

குறள் 257

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்புண்ணது உணர்வார்ப் பெறின் புலால்‌ உண்ணாமலிருக்க வேண்டும்‌; ஆராய்ந்து அறிவாரைப்‌ பெற்றால்‌, அப்புலால்‌ வேறோர்‌ உயிரின்‌ புண்‌ என்பதை உணரலாம்‌.

குறள் 256

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.பொருள் (மு.வ):புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்.

குறள் 255

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ணஅண்ணாத்தல் செய்யாது அளறு. பொருள் (மு.வ): உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.

குறள் 254

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்பொருளல்ல தவ்வூன் தினல்.பொருள் (மு.வ): அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.

குறள் 253:

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்உடல்சுவை உண்டார் மனம். பொருள் (மு.வ): ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது.

குறள் 252

பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சிஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.பொருள் (மு.வ): பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை.

குறள் 251

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்எங்ஙனம் ஆளும் அருள்.பொருள் (மு.வ): தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்?.

குறள் 250:

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்மெலியார்மேற் செல்லு மிடத்து பொருள் (மு.வ): (அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும்.