குறள் 249
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்அருளாதான் செய்யும் அறம் பொருள்(மு.வ): அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.
குறள் 248
பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார்அற்றார்மற் றாதல் அரிது பொருள் (மு.வ): பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர், அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயம் அற்றவரே அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.
குறள் 247:
அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கிவ்வுலகம் இல்லாகி யாங்கு பொருள் (மு.வ): பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறு போல உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.
குறள் -246
பொருள்நீங்கிப் பொச்சாந்தா ரென்பர் அருள்நீங்கிஅல்லவை செய்தொழுகு வார் பொருள்(மு.வ): இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.
குறள் எண் : 246
குறள்: பொருள்நீங்கிப் பொச்சாந்தா ரென்பர் அருள்நீங்கிஅல்லவை செய்தொழுகு வார். விளக்கம் : அருள் இல்லாமல் தீமைகளைச் செய்து வாழ்பவரைப் பொருளையும் இழந்து தாம் துன்பம் அடைந்ததையும் மறந்தவர் என்று அறிஞர் கூறுவர்.
குறள்:245
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்மல்லன்மா ஞாலங் கரி. பொருள்: உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று.
குறள் எண் : 245
அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்குமல்லன்மா ஞாலங் கரி. விளக்கம் : அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது; இதற்குக் காற்று உலவும், வளம் மிக்க இந்தப் பேருலகமே சான்று.
குறள் 244
மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்ப தன்னுயி ரஞ்சும் வினை பொருள் (மு.வ): தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.
குறள் 243
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்தஇன்னா உலகம் புகல்.பொருள் (மு.வ): அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.
குறள் 242
நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்தேரினும் அஃதே துணை.பொருள் (மு.வ): நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்; பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும்.








