குறள் 269
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.பொருள் (மு.வ):தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால்) எமனை வெல்லுதலும் கைகூடும்.
குறள் 268
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனையமன்னுயி ரெல்லாந் தொழும்.பொருள் (மு.வ): தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.
குறள் 267:
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.பொருள் (மு.வ): புடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரை துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்.
குறள் 266:
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமைஎல்லா அறமுந் தரும்.பொருள் (மு.வ): ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.
குறள் 265:
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்ஈண்டு முயலப் படும்.பொருள் (மு.வ): விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.
குறள் 264:
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்எண்ணின் தவத்தான் வரும். பொருள் (மு.வ): தீமை செய்யும் பகைவரை அடக்குதலும் நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும்.
குறள் 263:
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்மற்றை யவர்கள் தவம். பொருள் (மு.வ): துறந்தவர்க்கு உணவு முதலியனக் கொடுத்து உதவவேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோ?.
குறள் 262:
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனைஅஃதிலார் மேற்கொள் வது. பொருள் (மு.வ): தவக்கோலமும் தவஒழுக்கமும் உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக் கோலத்தை தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும்.
குறள் 261:
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமைஅற்றே தவத்திற் குரு.பொருள் (மு.வ):தான் பெற்ற துன்பத்தைப் பொறுத்தலும் மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகியவைகளே தவத்திற்கு வடிவமாகும். \
குறள் 260
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பிஎல்லா உயிருந் தொழும். பொருள் (மு.வ): ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.








