குறள் 281
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்கள்ளாமை காக்கதன் நெஞ்சு. பொருள் (மு.வ): பிறரால் இகழப்படாமல் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.
குறள் 280:
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்பழித்தது ஒழித்து விடின். பொருள் (மு.வ): உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டா.
குறள் 279
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்னவினைபடு பாலால் கொளல்.பொருள் (மு.வ):நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது. மக்களின் பண்புகளையும் செயல்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்.
குறள் 278
மனத்தது மாசாக மாண்டார் நீராடிமறைந்தொழுகு மாந்தர் பலர். பொருள் (மு.வ): மனத்தில் மாசு இருக்க, தவத்தால் மாண்பு பெற்றவரைப்போல், நீரில் மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்.
குறள் 277
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றிமுக்கிற் கரியார் உடைத்து.பொருள் (மு.வ):புறத்தில் குன்றிமணிப்போல் செம்மையானவராய் காணப்பட்டாராயினும் அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில் உணடு.
குறள் 276
நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்துவாழ்வாரின் வன்கணார் இல். பொருள் (மு.வ): மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வஞ்சனைச் செய்து வாழ்கின்றவரைப் போல் இரக்கமற்றவர் எவரும் இல்லை.
குறள் 273
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று பொருள்(மு.வ): மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது.
குறள் 272
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்தான்அறி குற்றப் படின்.பொருள் (மு.வ):தன் மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால் வானத்தைப் போல் உயர்ந்துள்ள தவக்கோலம் ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்?.
குறள் 271
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்ஐந்தும் அகத்தே நகும். பொருள் (மு.வ): வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.
குறள் 270
இலர்பல ராகிய காரணம் நோற்பார்சிலர்பலர் நோலா தவர்.பொருள் (மு.வ): ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.








