குறள் 291:
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்தீமை இலாத சொலல். பொருள் (மு.வ): வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.
குறள் 290:
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்தள்ளாது புத்தே ளுளகு. பொருள் (மு.வ): களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும், களவு செய்யாமல் வாழ்வோர்க்கு தேவருலகும் வாய்க்கத் தவறாது.
குறள் 289:
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்லமற்றைய தேற்றா தவர். பொருள் (மு.வ): களவு செய்தலைத் தவிர மற்ற நல்லவழிகளைத் நம்பித் தெளியாதவர் அளவு அல்லாத செயல்களைச் செய்து அப்போதே கெட்டழிவர்.
குறள் 288:
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்களவறிந்தார் நெஞ்சில் கரவு. பொருள் (மு.வ): அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம் போல் களவு செய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும்.
குறள் 287
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்ஆற்றல் புரிந்தார்கண்ட இல். பொருள் (மு.வ): களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.
குறள் 286
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்கன்றிய காத லவர்.பொருள் (மு.வ): களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.
குறள் 285
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.பொருள் (மு.வ):அருளைப் பெரிதாகக்கருதி அன்பு உடையவராய் நடத்தல், பிறருடைய பொருளைக்கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை.
குறள் 284
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்வீயா விழுமம் தரும்.பொருள் (மு.வ):களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.
குறள் 283:
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்துஆவது போலக் கெடும்.பொருள் (மு.வ): களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.
குறள் 282
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்கள்ளத்தால் கள்வேம் எனல். பொருள் (மு.வ): குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே, அதானால் பிறன் பொருளை அவன் அறியாதப் வகையால் வஞ்சித்துக்கொள்வோம் என்று எண்ணாதிருக்க வேண்டும்.








