குறள் 570:
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லதுஇல்லை நிலக்குப் பொறை. பொருள் (மு.வ): கடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத் தனக்கு அரணாகச் சேர்த்துக் கொள்ளும், அது தவிர நிலத்திற்கு சுமை வேறு இல்லை.
குறள் 569:
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்வெருவந்து வெய்து கெடும். பொருள் (மு.வ): முன்னமே தக்கவாறு அரண் செய்து கொள்ளாத அரசன் போர் வந்த காலத்தில் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான்.
குறள் 568:
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறிற் சிறுகும் திரு. பொருள் (மு.வ): அமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து எண்ணாத அரசன், சினத்தின் வழியில் சென்று சீறி நிற்பானானால், அவனுடைய செல்வம் சுருங்கும்.
குறள் 567:
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்அடுமுரண் தேய்க்கும் அரம். பொருள் (மு.வ): கடுமையான சொல்லும் முறைகடந்த தண்டனையும் அரசனுடைய வெற்றிக்கு காரணமான வலிமையைத் தேய்க்கும் அரம் ஆகும்.
குறள் 566:
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்நீடின்றி ஆங்கே கெடும். பொருள் (மு.வ): கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் இல்லாதவனாய் உள்ளவனுடைய பெரிய செல்வம் நீடித்தல் இல்லாமல் அப்பொழுதே கெடும்.
குறள் 565:
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்பேஎய்கண் டன்னது உடைத்து. பொருள் (மு.வ): எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது.
குறள் 564:
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்உறைகடுகி ஒல்லைக் கெடும் பொருள் (மு.வ): நம் அரசன் கடுமையானவன் என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ் சொல்லை உடைய வேந்தன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான்.
குறள் 562:
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்நீங்காமை வேண்டு பவர். பொருள் (மு.வ): ஆக்கம் நெடுங்காலம் நீங்காமலிருக்க விரும்புகின்றவர் (தண்டிக்கத் தொடங்கும் போது) அளவு கடந்து செய்வது போல் காட்டி அளவு மீறாமல் முறை செய்ய வேண்டும்.
குறள் 561
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து பொருள் (மு .வ): செய்த குற்றத்தைத் தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாதபடி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான்.
குறள் 560
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்காவலன் காவான் எனின் பொருள் (மு .வ): நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால் அந்நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும்; அந்தணரும் அறநூல்களை மறப்பர்.








