சருமம் பொலிவு பெற: அழகு குறிப்பு!..
கடலை மாவு, மஞ்சளுடன், பால் சேர்த்து பசை போல் செய்து கொள்ளவும். இந்த கலவையை முகம், கழுத்து பகுதியில் பூசிவிட்டு 20 நிமிடங்கள் உலர விடவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் டவலை முக்கி முகத்தில் படிந்திருக்கும் பேஸ் பேக்கை துடைத்தெடுக்கவும். பின்பு…
கூந்தல் வளர்ச்சியில் வேப்பிலை!
எத்தனை வைத்தியங்கள் இருந்தாலும் பாட்டி வைத்தியத்துக்கு தனி மதிப்பு என்பது போன்று பாரம்பரியமான அழகு குறிப்புகளுக்கும் தனி மதிப்பு உண்டு. அதிலும் அழகு குறிப்பில் முன்னோர்கள் பின்பற்றி வந்த பல ரகசிய அழகு குறிப்புகளை பெரும்பாலும் இப்போது பின்பற்றப்படுவதில்லை. நூற்றாண்டுகளாக சருமத்துக்கும்…
அழகு குறிப்புகள்:
கூந்தல் நன்றாக வளர:செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறியபின் கூந்தலை சீயக்காய் போட்டு அலசவும். கூந்தல் நன்றாக வளரும்.
தலைமுடி அடர்த்தியாக வளர
ஐந்து இதழ்கள் கொண்ட செம்பருத்தி பூவை அரைத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.
முகம் பளிச்சென்று இருக்க:
எண்ணெய் வழியும் சருமத்திற்கு மோரில் பஞ்சை நனைத்து முகம், கழுத்தில் தடவி 10 அல்லது 15 நிமிடங்கள் ஊற வைத்துக் கழுவினால், முகம் பளிச்சென்று இருக்கும்.
முகத்தில் மேக்கப் கலையாமல் இருக்க
முகத்துக்கு மேக்கப் போடுவதற்குமுன் லேசாக முகம் முழுவதும் பன்னீரைத் தடவினால், சருமம் மென்மையாக இருக்கும். நீண்ட நேரம் மேக்கப் கலையாமலும் இருக்கும்.
முகம் பட்டுப்போன்று மின்ன
தக்காளியை அரைத்து அத்துடன் சிறிதளவு எலுமிச்சை சாறு விட்டுக் கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து பின்னர் கழுவினால் முகம் பட்டுப்போன்று மின்னும்.
கைகள் இளமையாக
பால், எலுமிச்சை சாறு, தேன் – தலா 1 ஸ்பூன் முதலில் எலுமிச்சை சாற்றை தேனுடன் கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் பாலை சேர்த்து கைகளில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்து வந்தால் கைகள் இளமையாக இருக்கும்.
சரும வறட்சி நீங்க
கேரட்டை துருவி, அதை சருமம் அதிகம் வறண்டு போகும் பகுதியில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி செய்வதால், அதில் உள்ள வைட்டமின் ஏ, குளிர்கால சரும பிரச்சனைகளைப் போக்கும்.
கைகள் பட்டுபோன்று மென்மையாக இருக்க
ஆலிவ் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து கைகளில் தடவினால் கைகள் பட்டு போன்று மென்மையாக இருக்கும். மேலும், உங்களின் கைகளை அழகாகவும் மாற்றும்.