• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தாமதமின்றி சாதி சான்றிதழ்களை வழங்க வேண்டும்- ராமதாஸ்

ByA.Tamilselvan

Oct 13, 2022

பழங்குடியினர் சாதி சான்றிதழ்களை தாமதமின்றி வழங்க வேண்டும் எனபா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல் உள்ளார்.
டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டரில் பதிவில் ….கொண்டாரெட்டி, மலைக்குறவர் ஆகிய இரு சாதிகளும் பழங்குடியினர் பட்டியலில் முறையே 12, 23 ஆகிய இடங்களில் உள்ளன. விண்ணப்பித்த ஒரு மாதத்தில் சாதி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என விதி உள்ள நிலையில், சாதி சான்றிதழ் மறுக்கப்படுவது தான் தற்கொலைகளுக்கு காரணம் ஆகும். பழங்குடியின சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை என்பதற்காக இனியும் ஒரு தற்கொலை நிகழக்கூடாது. இதைக் கருத்தில் கொண்டு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்குவதற்கான நடைமுறைகளை எளிமையும், செம்மையும் படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.