• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்குப்பதிவு.. மீண்டும் தினகரன் ஆஜர்..

Byகாயத்ரி

Apr 22, 2022

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் அதிகாரிகளுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. டெல்லி போலீசாரின் முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.மேலும் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் டி.டி.வி.தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதனையடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் டிடிவி தினகரன் கடந்த 12-ம் தேதி ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறையினர் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் டிடிவி தினகரன் மீண்டும் ஆஜராகியுள்ளார்.