அனைவருக்கும் பிடித்தமான தலைவர்களில் எம்.ஜிஆருக்கு பிறகு விஜயகாந்த்தான் என பிரேமலதா கூறியுள்ளார். தேமுதிக அல்லது விஜயகாந்த் குறித்து முக்கிய செய்திகள் சமீபத்தில் எதுவும் வெளியாகத நிலையில் திருமண நிகழ்வு ஒன்றில் பிரேமலதா கலந்து கொண்டார். மழைநீர் வடிகால் பணிகளில் அரசின் முயற்சிகளை பாராட்டிய அவர் தேமுதிக தொண்டர்களும் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.