• Tue. Apr 23rd, 2024

ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது… ஓசூரில் திருடர்களை ‘கவனிக்க’ சிறப்பு ஏற்பாடு!

By

Aug 19, 2021

கிராமப்புறங்களில் உள்ள குற்றச்செயல்களை கண்காணிக்க ஓசூர் அருகே சிசிடிவி கண்ணானிப்பு அறை திறப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கிராமப்பகுதிகளில் நடைபெறும் குற்ற சம்பவங்களை கண்காணிப்பதற்காக கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கெலமங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான அக்கொண்டப் பள்ளி போன்ற பகுதிகளில் 54 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதனை கண்காணிக்கும் அறையை மாவட்ட எஸ்பி சாய் சரண் தேஜஸ்வி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.சரண் தேஜஸ்வி கூறியதாவது: இன்று மாவட்டம் முழுவதும் 200க்கு மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இதேபோல் கெலமங்கலம் மற்றும் அதன் சுற்றுபுற கிராமங்களில் 54 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

குற்றச்செயல்களை தடுப்பதற்கும், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காகவுவே இந்த கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். விழாவில் துணை காவல் கண்கணிப்பளர் ராஜி, தேன் கனிக்கோட்டை கூடுதல் காவல் கண்காணிப்பளர் கிருத்திகா, காவல் ஆய்வாளர் சுப்பிரமணி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *