• Wed. Apr 24th, 2024

அடுத்தாண்டு நடைபெறும் ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு
இந்திய அணி தகுதி..!

Byadmin

Jun 15, 2022

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 18-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு ஏற்கனவே 13 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுவிட்ட நிலையில், மீதம் 11 அணிகளை தேர்வு செய்வதற்கான 3-வது கட்ட தகுதிச் சுற்றுப் போட்டியின் ‘டி’ பிரிவு ஆட்டங்கள் கொல்கத்தாவில் நடைபெற்று வருகின்றன. இந்தத் தகுதி சுற்றுப் போட்டியில் இந்திய அணி தங்கள் கடைசி போட்டியில் ஹாங்காங் அணியுடன் இன்று மோதியது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் 2 வது நிமிடத்தில் இந்திய அணியின் அன்வர் அலி ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து ஆட்டத்தின் 45 வது நிமிடத்தில் அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடந்த 2வது பாதியில் இந்திய அணியின் அபாரமான ஆட்டம் தொடர்ந்தது. 85வது நிமிடத்தில் மண்விர் சிங், 93வது நிமிடத்தில் இஷான் பண்டிதா கோல் அடித்தனர். இதனால் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் டி-பிரிவு அணிகளில் 9 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. இந்திய அணி ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்திய அணி தொடர்ந்து 2-வது முறையாக தகுதி பெறுவது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *